நீரிலும், நிலத்திலும் இயங்கக்கூடிய வாகனங்களை பற்றி பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் சிலர் தான் நேரில் பார்த்திருப்பீர்கள். இவை தண்ணீரிலும் மிதக்கக்கூடியவைகளாக விளங்குவதால் இத்தகைய வாகனங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் வந்திறங்கிய ரஷ்ய ‘ஷெர்ப்’ வாகனங்கள் நிலத்திலும் செல்லும், நீரிலும் மிதக்குமாம். எந்தவொரு பாதையிலும் இயங்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும் இந்த வாகனங்கள் இந்தியாவை காட்டிலும் வெளிநாடுகளில் தான் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன.
அதிலும் ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில் இத்தகைய வாகனங்கள் இரண்டாம் உலக போரில் இருந்தே செயல்பாட்டில் உள்ளன.இந்த வாகனத்தால் எந்த ஒரு பாதையிலும் பயணம் செய்ய முடியும் மேலும் இந்த வாகனம் கவி வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்த வாகனத்தின் எடை 1300 கிலோ ஆகும். இதில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும். அமெரிக்காவில் 43 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.