அடக்கம் செய்யப்பட்டதாக உறவினர்கள் கருதப்பட்டவர் மீண்டும் உயிரோடு வந்த சம்பவம்பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். 49 வயதான இவர் மனநோயால் பாதிக்கப்பட்டராவார். கடந்த மாதம் 26ஆம் தேதி சஞ்சீவ் குமார் காணாமல் போயுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தில் தேடிய இவரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையும் தேடி வந்த நிலையில் உறவினர்களும் காத்திருந்தனர்.ஒரு நாள் சஞ்சீவ் குமார் வீட்டிற்கு அருகில் இருந்த ஆற்றில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கிடைத்தது.
இந்த சடலத்தை இதை கைப்பற்றி விசாரித்த போலீசார் இது சஞ்சீவ் குமார் உடல்தான் என்று சஞ்சீவ்_வின் உறவினர்களும் உறுதி செய்து , உடலை போலீசாரிடம் வாங்கி அடக்கம் செய்தனர். பின்னர் தீடிரென வீட்டிற்கு வந்த சஞ்சீவ் குமாரை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விசாரித்த போது சஞ்சீவ் குமார் என்று உறுதி செய்து அடக்கம் செய்தவர் வேறு ஒருவர் என்று தெரியவந்துள்ளது.அடக்கம் செய்தவர் திரும்பி வந்துவிட்டார் என்று இந்த செய்தி பீகாரில் வைரலாகி வருகிறது.