ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலைகளை இந்த மாதத்திலிருந்து அதிகரித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது.
ராயல் என்ஃபீல்ட் அனைத்து இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தமான பைக் வகைகளில் ஒன்று. இந்த வகை பைக்குகளுக்கு தனி மவுசு உள்ளது. இதனை வாங்குவதற்கு இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதன் விலையும் அதேபோல் மிக உயர்ந்து கொண்டே வருகின்றது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் உயர்த்தியுள்ளது.
அதன்படி கிளாசிக் 350 சிசி ராயல் என்ஃபீல்டு விலை ரூபாய் 7,000மும், மெடியோர் 150சிசி விலை ரூபாய் 6000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஹிமாலயனின் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் ஐந்தாயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ராயல் என்ஃபீல்டு பைக் பிரியர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.