நாமக்கல் மாவட்டத்தில் இடதகராறு காணமாக கணவன் மனைவி இருவரை அரிவாளால் தாக்கிய ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை அடுத்துள்ள தேவராயபுரம் பகுதியில் சிவகுமார்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி வனிதா(40). இந்நிலையில் விவசாயியான சிவகுமாருக்கு முட்டாஞ்செட்டி செல்லும் சாலையில் 75 சென்ட் நிலம் உள்ளது. இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் ரயில்வே ஊழியரான சுதாகர்(45) என்பருடைய 60 சென்ட் நிலம் சிவகுமார் நிலம் அருகில் உள்ளது. இதனைத்தொடர்ந்து சிவகுமார் மற்றும் வனிதா அவர்களது நிலத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த சுதாகர் இந்த வழியாக செல்லக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த சுதாகர் அவர் வைத்திருந்த அரிவாளால் சிவகுமார் மற்றும் அவருடைய மனைவி வனிதாவை தாக்கியுள்ளார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து படுகாயமடைந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் சிவகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் சுதாகரை எருமைப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.