கொள்ளு சட்னி
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 1/2 கப்
புளி – 1 துண்டு
சீரகம் – 1/2 ஸ்பூன்
பூண்டு – 4 பல்
வத்தல் – 6
தேங்காய் – 1/2 கப்
கடுகு – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொள்ளு, சீரகம், வத்தல் , தேங்காய், உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் இதனை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை தாளித்து கொட்டினால் சுவையான கொள்ளு சட்னி தயார்!!!