ஒப்போ நிறுவனம் ட்தனது ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது .
ஒப்போவின் ரெனோ 2 இசட் ஸ்மார்ட்போன்கள் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் ஆன்லைன் தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வழியாக விற்பனையாக உள்ளது. இந்த ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,990 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது . மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள் லுமினஸ் பிளாக், ஸ்கை வைட் மற்றும் போலார் லைட் போன்ற வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் அளவிலான அமோல்டு டிஸ்ப்ளேவையும், மீடியா டெக் ஹீலியோ பி 90 எஸ்ஓசி மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் VOOC 3.0 ப்ளாஷ் சார்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது . இதில், 48 மெகாபிக்சல் அளவிலான சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார், 8 மெகாபிக்சல் அளவிலான வைட் ஆங்கிள் லென்ஸ் (119 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ), 2 மெகாபிக்சல் அளவிலான மோனோக்ரோம் சென்சார் ஆகியவைகளை உள்ளடக்கிய மூன்று பின்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி அளவிலான பாப்அப் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்போ ரெனோ 2இசட்டின் கேமரா அம்சங்களில் அல்ட்ரா டார்க் மோட், அல்ட்ரா ஸ்டெடி மோட், ஏஐ பியூட்டி மோட் மற்றும் ஆம்பியண்ட் லைட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதில் ஆப்டிகல் ஜி3 இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை வழங்கப்பட்டுள்ளது.