Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொது பிரச்சனைகளுக்கு…. மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம்…. முதன்மை நீதிபதியின் தகவல்….!!

பொது பிரச்சனைகளுக்கு மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.

பொது பயன்பாட்டு சேவைகள் குறித்து ஏற்படும் பிரச்சனைகளான தரைவழி, ஆகாயவழி, நீர்வழி மூலம் பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்து சேவைகள், அஞ்சல், தந்தி, தொலைபேசி, மின்சாரதுறை, குடிநீர் வழங்கல் துறை, காப்பீட்டு துறை மருத்துவமனை, மருந்தகம், வீடு, ரியல் எஸ்டேட் தொடர்பாக சேவைகள், கல்வித்துறை தொடர்பான சேவைகள், தொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் அனைவரும் மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என முதன்மை நீதிபதி  வசந்தலீலா தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் நீதிமன்றம் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் எதிரில் அமைந்துள்ள மாற்றுதீர்வு மைய கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அலுவலகத்தை பொதுமக்கள் அனைத்து வேலை நாட்களிலும் அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுப்பிரச்சினைகள் யாருக்காவது ஏற்பட்டால் குறைகளை விளக்கமாக மனுவில் தெரிவித்து மக்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி நீதிமன்றத்தை அணுகாமலே உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு மக்கள் நீதிமன்றங்களில் அளிக்கப்படும் தீர்ப்புகள் மீது கீழமை கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடியாது. இதனையடுத்து உயர் நீதிமன்றத்தில் மட்டுமே ரிட் மனு தாக்கல் செய்ய முடியும். அதன்பின் மக்கள் நீதிமன்றத்தில் பெறப்படும் மனுவில் சொல்லப்படும் பிரச்சினைகள் குறித்து எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கக்கூடாது. இதன் தலைவராக மாவட்ட நீதிபதி அருணாச்சலம் பொறுப்பு வகித்து வருகின்றார். மேலும் மக்கள் நீதிமன்ற அலுவலகத்தை 0416-2255599 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |