Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய தாய்… மகன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவேதனையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ஜோதி நகரில் லட்சுமணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராமசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சோமசுந்தரி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 மாதங்களாகவே ராமசாமிக்கு வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததால், இவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் சோமசுந்தரி கணவரிடம்  கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ராமசாமி மிகுந்த மன வேதனையுடன்  இருந்துள்ளார்.

இந்நிலையில் ராமசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணையை எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய ராமசாமியின் தாய் தனது மகன் உடல் முழுவதும் கருகிய நிலையில் கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |