Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்… அரியலூரில் நடந்த சோகம்…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள தென்னவநல்லூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்துள்ளார்.  கடந்த சில நாட்களாக செல்வராஜ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை அவரது உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார் .மேலும் இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |