Categories
உலக செய்திகள்

இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் இந்த விதி இல்லை.. சிங்கப்பூர் தான் தீர்மானிக்கும்.. அமைச்சர் பேச்சு..!!

சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர், இந்திய மக்களுக்கு தடையின்றி அதிகமாக வேலைவாய்ப்புகள் வழங்கும் எந்த விதிமுறைகளும் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையில் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம், கடந்த 2005 ஆம் வருடத்தில் கையெழுத்தானது. இது குறித்த பிரச்சனைகள் சிங்கப்பூரில் அடிக்கடி ஏற்படுகிறது. அதாவது எதிர்க்கட்சிகள், பொருளாதார ஒப்பந்தத்தில், இந்திய மக்களை சிங்கப்பூரில் அதிகமாக நிபந்தனை இல்லாமல் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று இருப்பதாக குற்றம் சாட்டுகிறது.

எனவே, நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கூறிய, சிங்கப்பூரின் சுகாதார அமைச்சரான, ஓங் யீ கு பேசியவாதவது, சிங்கப்பூருக்கு பிற நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது மிக முக்கியம். அதனால் தான் இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்திய மக்களுக்கு தடையில்லாமல் அதிக வேலை வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அந்த ஒப்பந்தத்தில் இல்லை.

கடந்த வருட தேர்தலுக்கு முன், இதே போன்ற பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தினார்கள். சிங்கப்பூர் அரசு தான், தங்கள் நாட்டில் பிறநாட்டு பணியாளர்களை அனுமதிக்கவும், உரிய வேலையை வழங்க ஏற்பாடு செய்வது, நிரந்தர குடியுரிமை அளிப்பது போன்ற அனைத்து செயல்களையும் தீர்மானிக்கும்.

இதில் பிற நாடுகள் எப்போதும் தலையிடாது. மேலும் பணியாளர்களை நியமிப்பதில் உள்ளூர் பணியாளர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சிங்கப்பூரில் இருக்கும் நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |