மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்நாதன் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட செந்தில் குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த அன்று செந்தில்குமாருடன் அவரது நண்பரான சின்ன துரை இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பிறகு சின்னதுரையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து நண்பர்கள் 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சின்னதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்தில்குமாரை குத்தி கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.