Categories
உலக செய்திகள்

இதுல எந்த மாற்றமும் இல்ல…. இந்த ஒப்பந்தத்தின்படிதான் செயல்படுவோம் …. ஈரான் அதிபர் திட்டவட்டம் ….!!!

கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்தவிதமான  மாற்றமும் இருக்காது என்று ஈரான் நாட்டு அதிபர் கூறியுள்ளார் .

ஈரான் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ராய்சி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்க உள்ளது. இந்த புதிய அரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக சர்வதேச அரசியலில்  எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது. குறிப்பாக அணுசக்தி  ஒப்பந்தத்தில் அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாகவே மோதல் நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த 2015ஆம் ஆண்டு இரு நாடுகளும் அணுசக்தி  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஈரான் நாடு மீறுவதாக கூறும் அமெரிக்கா ஈரான் நாட்டின்  மீது தொடர்ந்து பொருளாதார தடையை விதித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்த ஆண்டு ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் ஈரான் நாட்டில் புதியதாக ஆட்சி அமைக்க உள்ள அதிபர் இப்ராஹிம் ராய்சி  தலைமையிலான அரசு, இந்த அணுசக்தி  ஒப்பந்தத்தில் எந்தவிதமான  மாற்றமும் இருக்காது என்றும் 2015ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி ஈரான் தொடர்ந்து செயல்படும் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இரு நாடுகளில்  ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் சுமூகமான உறவுக்கு வழிவகுக்குமான என்று சர்வதேச அரசியலில் எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது.

Categories

Tech |