Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இடிந்து விழும்படி இருக்கு…. புதிய கட்டிடம் கட்டித்தரகோரி…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மழவராயநல்லூர் கால்நடை துணை மருந்தகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரகோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேல் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கஜா புயலில் இந்த மருந்தக கட்டிடம் முழுவதும் நாசமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. இந்த மருந்தக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இங்கு தட்டாங்கோவில், உச்சிமேடு, கீழ்கண்டமங்களம், மழவராயநல்லூர், திருவண்டுதுறை, கருப்பட்டிமூலைசேரி, குன்னியூர், வீராக்கி போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வர வேண்டியதாக இருக்கின்றது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக திருவெண்டுதுறை சமுதாய கூட கட்டிடத்திற்கு வாரம் ஒருநாள் மட்டும் கால்நடை மருத்துவர் வந்து செல்கின்றார். இதனால் பல கிராமங்களுக்கு மருத்துவர் வந்து செல்லும் நேரம் தெரியாததால் கால்நடை வளர்ப்போர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஆகவே மழவராயநல்லூர் கால்நடை  துணை மருந்தகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றும் வாரத்தில் 3 நாட்கள் மருத்துவர் வந்து இங்கு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |