Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! ஒரே நாள்ல இவ்ளோவா…? முன்னேறிச் செல்லும் அமேசான்…. சொந்த சாதனையை முறியடித்த தலைவர்….!!

ஒரே நாளில் சுமார் 8.4 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பைப் பெற்ற அமேசான் நிறுவனத்தின் தலைவர் தனது முந்தைய உலக பணக்காரர் என்னும் சாதனையை முறியடித்துள்ளார்.

பென்டகன் நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் போட்டிருந்த 10 பில்லியன் டாலர் மதிப்புடைய ஜெடி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் மைக்ரோசாஃப்ட் உடனான அமேசான் நிறுவனத்தின் பங்கு 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதனால் அமேசான் நிறுவனத்தினுடைய தலைவரான ஜெப் பெசோஸ் என்பவருக்கு ஒரே நாளில் சுமார் 8.4 பில்லியன் டாலருக்கு நிகரான சொத்து மதிப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் 210 பில்லியன் டாலரின் மூலம் உலக அளவில் பணக்காரர் என்னும் சாதனையை படைத்த அமேசான் நிறுவனத்தின் தலைவர் தற்போது அதனை முறியடித்துள்ளார். அதாவது உலக பணக்காரராக திகழும் அமேசான் நிறுவனத்தினுடைய தலைவரின் தற்போதைய சொத்து மதிப்பு 211 பில்லியன் டாலர் ஆகும்.

Categories

Tech |