ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஹுவாலியர் கவுண்டியில் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் நேற்று இரவு 7.24 மணிக்கு நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனை அடுத்து சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் இந்த நிலநடுக்கம் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.