Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

10 ரூபாய்க்கு வாங்குறோம்…. ரொம்ப கஷ்டமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

வீராக்கி கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வீராக்கி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்த குடிநீரில் நாளடைவில் உப்புத்தன்மை அதிகமானதால் குடிக்கவும், சமைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று பொதுமக்கள் பள்ளிவர்த்தி கிராமத்தில் உள்ள கைப்பம்பில் குடிநீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டது. இதனால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீராக்கி கிராமத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் ஆதிச்சபுரம் ஆர்ச் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

எனவே குழாய் மூலம் இந்த கிராமத்திற்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வீராக்கி கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் கூறும்போது, இங்கு விவசாய தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் தன்மையாக இருப்பதனால் அருகிலுள்ள ஆதிச்சபுரம் பகுதிக்கு 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வரிசையில் நின்று கைபம்பில் குடிநீர் பிடித்து வருவதால் பொதுமக்கள் வேலைக்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால் முதியவர்கள் 10 ரூபாய் கொடுத்து ஒரு குடம் தண்ணீர் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பல வேதனைகளை கடந்த 4 ஆண்டுகளாக அனுபவித்து வரும் எங்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |