தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தார். இதையடுத்து பலரும் ஒன்றிய அரசு என்று அழைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதற்கு விளக்கமளித்த முதல்வர், ஒன்றியம் என்றால் கூட்டாட்சி என்பது பொருள். மேலும் ஒன்றிய அரசு என்று தான் எப்போதும் பயன்படுத்துவோம் ,பயன்படுத்திக் கொண்டே இருப்போம். இதை கண்டு யாரும் மிரள தேவையில்லை என்று கூறினார்.
இதையடுத்து தமிழகம் முழுவதுமாக ஒன்றிய அரசு என்ற வார்த்தை பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளி பாடப்புத்தகங்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என்று மாற்றப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். மேலும் பெண்களை இழிவு படுத்தியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் டயர்நக்கி என பயன்படுத்திய வார்த்தை விட இது இழிவுபடுத்தும் செயல் இல்லை என்றும் கூறியுள்ளார்.