அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார்.
மலையாள திரையுலகில் 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இயக்குனர் சாகர் சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவன் கல்யாண், நித்யா மேனன் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஜூலை 12-ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.