தஜிகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.1 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
தஜிகிஸ்தானில் உள்ள துசான்பே நகரிலிருந்து தென்கிழக்குப் பகுதியில் சுமார் 393 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 4.22 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது. இதனை அடுத்து இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.