Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

புதிய இங்கிலாந்து அணி அறிவிப்பு.. கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் களமிறங்குகிறார்..!!

இங்கிலாந்தின் வீரர்கள் மூவருக்கும், அணி நிர்வாகிகள் நான்கு பேருக்கும் கொரோனா ஏற்பட்டதால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் அணியானது, இங்கிலாந்தில் ஒருநாள் போட்டி 3 மற்றும் டி20 போட்டிகள் உடைய தொடர்களில் ஆடுகிறது. எனவே அங்கு தனிமைப்படுத்துதலுக்கு பின்பு தற்போது பாகிஸ்தான் அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளது. அப்போது போட்டிக்கு முன்பாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், இங்கிலாந்து வீரர்கள் மூவருக்கும், நிர்வாகிகள் 4 பேருக்கும் கொரோனா இருந்தது தெரியவந்தது. அந்த வீரர்களின் பெயர்கள் தெரிவிக்கப்படவில்லை. எனினும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட புதிய அணி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி, இங்கிலாந்தின் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், புதிய வீரர்கள் 9 பேருடன் ஒருநாள் தொடரின் புதிய அணியை நேற்று அறிவித்திருக்கிறது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மோர்கனுக்கு பதிலாக அணிக்கு தலைமை தாங்குவர். மேலும் டேனியல் லாரன்ஸ், கிராவ்லி  போன்ற டெஸ்ட் வீரர்கள் முதல் தடவையாக ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

தற்போது தான், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முன்னரே அறிவிக்கப்பட்ட அணிக்கு மாற்றாக மொத்தமாக புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |