செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் ஆதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோரிடம் வெங்கடேஷ் செல்போன் வாங்கித் தருமாறு அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளார்.
ஆனாலும் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் விரக்தியில் இருந்த வெங்கடேஷ் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.