இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கிராம நிர்வாக அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தென்வெட்டுகாரப் பகுதியில் செந்தில் வடிவேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து செந்தில் வேலன் இருசக்கர வாகனத்தில் பாபநாசம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த காரானது செந்தில் வேலனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
அதன்பின் படுகாயமடைந்த செந்தில்வேலனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செந்தில் வடிவேலன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து செந்தில் வேலனின் மகனான சந்திரன் என்பவர் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.