Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தரல” இவர்களிடம் 5 லட்சம் கொடுத்தேன்….. நடவடிக்கை எடுக்கனும்….!!

வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை திருப்பித் தராததால் முன்னாள் அமைச்சர் மற்றும் உதவியாளர் புகார் வந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விஜிலாபுபரம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகின்றார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் “அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த நிலோபர்கபில் மற்றும் அவரது உதவியாளர் பிரகாசம் என்பவரிடம் அரசு வேலைக்காக 5 லட்சத்தை நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்துள்ளேன்.

இவ்வாறு வேலை வாங்கித் தராமல் தன்னிடம் பணத்தை வாங்கி கொண்ட முன்னாள் அமைச்சரும், அவரது உதவியாளரும் இதுவரை தனக்கு வேலை வாங்கி தராததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டுத் தரவேண்டும்” என்று மணி புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |