காலாவதியான 35 கிலோ உணவு பொருட்கள் கடைகளில் வைத்திருந்ததால் உரிமையாளருக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுண்ணாம்புகார தெருவில் இருக்கும் மளிகைக் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு காலாவதியான 35 கிலோ உணவுப் பொருளை அதிகாரி கைப்பற்றினார். மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.