Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால்…. வாலிபரின் விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் சோகம்….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை பாதியில் முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இதனையடுத்து அபிஷேக்கிற்கு திருமணமான பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஜெயசங்கர் மகன் அபிஷேக்கை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக அபிஷேக் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஜெய்சங்கர் பணி முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய போது அபிஷேக்கை காணவில்லை.

அதன்பின் ஜெய்சங்கர் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த ஜெயசங்கர் உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அபிஷேக் தூக்கில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த தக்கலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபிஷேக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு திருமணமான பெண்ணுடன் தொடர்பு இருந்ததை ஜெயசங்கர் கண்டித்ததால் அபிஷேக் தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |