விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சம்பக்குளம் பகுதியில் சிக்கந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் பூட்டப்பட்ட கடையை சிக்கந்தர் தற்போது திறந்து பார்த்துள்ளார்.
அப்போது கடையில் இருந்த கம்ப்யூட்டர், ஏ.சி எந்திரங்கள் போன்ற 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் சிக்கந்தர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் திருடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.