பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட கால்வாய் தண்ணீரில் சிறுவர்களும், இளைஞர்களும் உற்சாகமாக குளித்து விளையாடினர்.
கொரோனா காலகட்டத்தில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே சென்று வந்துள்ளனர். தற்போது தொற்று குறைந்ததால் மக்களின் வாழ்க்கை பழைய நிலைமைக்கு திரும்புகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுரை மாவட்டத்தில் உள்ள கால்வாய் தண்ணீரில் சிறுவர்களும், இளைஞர்களும் உற்சாகமாக குளித்து விளையாடி உள்ளனர்.