Categories
தேசிய செய்திகள்

பயத்தின் உச்சம்… நட்புடன் பழகிய 6 வயது சிறுமியை… அதுவும் 3 வருஷமா… பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை…!!!!

நட்புடன் பழகிய ஆறு வயது குழந்தையை மூன்று வருடமாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் ஆறு வயது குழந்தை கயிறு இறுக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் தற்போது முக்கிய திருப்பமாக அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தேயிலைத் தோட்ட தொழிலாளியின் குழந்தையான 6 வயது சிறுமி வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிறு இறுக்கி உயிரிழந்ததாக கூறப்பட்டது. விளையாடும்போது கழுத்து இறுகி உயிர் இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் அனைத்தும் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் இடுக்கி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற குழந்தையின் பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் கடந்த மூன்று வருடங்களாக இந்த குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த காவல்துறையினர் அந்த குடும்பத்தினரையும், வீட்டின் அருகிலுள்ள அண்டை குடும்பத்தினரையும் விசாரணை செய்தனர். அப்போது அந்த குழந்தையின் வீட்டில் அருகில் உள்ள அர்ஜுன் என்பவரிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

சந்தேகத்தின் அடிப்படையில் அவரை அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். சம்பவ தினத்தன்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போது திடீரென்று அவர் உயிரிழந்ததார். இதையடுத்து வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிற்றில் கட்டி தொங்க விட்டுள்ளார். மேலும் குழந்தையின் இறுதி சடங்கில் சாதாரணமாக அனைவருடன் பேசி பழகி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |