Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“இதுல ஏதோ மர்மம் இருக்கு” தோண்டி எடுக்கப்பட்ட உடல்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

மனைவி அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஜயலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் மல்லிகா சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். அங்கிருந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது விஜயலிங்கம் திடிரென இறந்து விட்டதாக அவரது  உறவினர்கள் மல்லிகாவிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த மல்லிகா தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக ராணிப்பேட்டை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனையடுத்து தாசில்தார் விஜயசேகர், கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் புதைக்கப்பட்ட விஜயராகவன் உடலானது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தோண்டி எடுக்கப்பட்ட விஜயராகவன் உடலை சுடுகாட்டில் வைத்தே மருத்துவர்கள் ஜீவன், மகேந்திரன் ஆகியோரின் தலைமையில் மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்துள்ளனர். அதன் பின் விஜயலிங்கத்தின் உடல் மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |