Categories
தேசிய செய்திகள்

இனி உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி எந்த கவலையும் வேண்டாம்… மத்திய அரசின் அருமையான திட்டம்…!!!

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்த திட்டம் மைனர் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையத்தில் இத்திட்டத்திற்கு கணக்கை எளிதாக தொடங்கலாம். ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10வயது வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த எஸ்எஸ்ஒய் கணக்கை துவக்க முடியும். இதன் முதிர்வு காலம் 21 வருடமாகும். இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் – ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆகும்.

இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு மிக உதவியாக இருக்கும். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் குறைந்தபட்ச வைப்பு ஒவ்வொரு ஆண்டும் 1,000 ரூபாய் தேவைப்படுகிறது. 21 ஆண்டுகள் நிறைவடையும் போது SSY திட்டம் முதிர்ச்சியடைகிறது. முதிர்ச்சியடைந்ததும், நிலுவைத் தொகை, கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவருக்கு செலுத்தப்படும். முதிர்ச்சியடைந்த பின்னர் SSY கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகை தொடர்ந்து வட்டி சம்பாதிக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 21 வயது காலம் முடிவதற்குள் பெண் குழந்தை திருமணமானால் கணக்கு தானாகவே மூடப்படும்.

Categories

Tech |