Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: மக்களிடம் கையெழுத்து பெற்று போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 101.37 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒரு சிலர் நூதனமான முறையில் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்களிடம் கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்ட உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.

Categories

Tech |