கனடாவின் கவர்னர் ஜெனரலாக பழங்குடியின பெண்ணொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கடந்த செவ்வாய்க்கிழமை கனடாவின் அடுத்த கவர்னர் ஜெனரலாக டென்மார்க்கின் முன்னாள் தூதரும் வழக்கறிஞருமான மேரி சைமன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவித்தார். மேலும் அவர் கனடாவின் ஆயுதப்படை தளபதியாகவும் மகாராணியின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாகவும் பணியாற்றுவார் எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சைமன் பழங்குடியினர் உரிமைகள் மற்றும் கலாச்சாரத்தின் வக்கீலாக பணியாற்றியுள்ளார் என்றும் கனடா 154 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை தேர்வு செய்துள்ளது என்பதையும் தெரிவித்தார்.