Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அது என்ன சத்தம்…? எட்டிப்பார்த்த உரிமையாளர்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கிணற்றில் தவித்துக்கொண்டிருந்த மயில் குஞ்சுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனதுறையினிடம் ஒப்படைத்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் உள்ள கந்தம்பட்டி கிராமத்தில் கோகில வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் 40 அடி ஆழமுள்ள தண்ணீர் நிரம்பிய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென அந்த கிணற்றிலிருந்து மயில் குஞ்சுகளின் சத்தம் வந்துள்ளது. இதனை அடுத்து கோகிலவாணன் அங்கு சென்று பார்த்த போது மயில் குஞ்சுகள் கிணற்றில் உள்ள பாறையில் இருந்து பரிதாபமாக சத்தமிட்டுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோகிலவாணன் உடனே வேடச்சந்தூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி மூன்று மயில் குஞ்சுகளையும் பாதுகாப்பாக மீட்டனர். இதனையடுத்து  பத்திரமாக மீட்ட மயில் குஞ்சுகளை தீயணைப்பு படை வீரர்கள் அய்யலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்பு வனத்துறையினர் மயில் குஞ்சுகளை காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

 

Categories

Tech |