நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்க இருக்கிறார்.
தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாசு திரைப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கின்றார்.கேங்க்ஸ்டர் திரில்லர் படமாக தயாராக உள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க இருக்கின்றார்.
இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் ஜோசப் திரைப்படத்தின் தேசிய விருதுக்கு தேர்வான ஜோஜு ஜார்ஜ் ஒப்பந்தமாகியிருக்கிறார் YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் துவங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.