லாரி கிளீனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பிள்ளையார் கோவில் பகுதியில் லாரி கிளீனரான செல்லப்பா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்புத்தாய் என்ற மனைவி உள்ளார். இவர் சாகு புரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு செல்லும் தனியார் லாரியில் முருகேசன் என்பவருடன் கிளீனராக வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் செல்லப்பா, முருகேசன் என்பவருடன் இணைந்து லாரியில் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும்போது நுழைவுவாயில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் மது குடித்துவிட்டு வந்தது தெரியவந்துள்ளது.இதனால் தொழிற்சாலையின் ஊழியர்கள் செல்லப்பாவை மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லக்கூடாது என்று தெரிவித்ததால் அவர் செல்லவில்லை.
இதனையடுத்து முருகேசன் வேலையை முடித்துவிட்டு திரும்பிச் சென்று செல்லப்பாவை தேடிய போது அங்கு அவர் இல்லை. அதன்பிறகு முருகேசன் உப்பள சாலையின் பகுதியில் சென்று தேடிய போது அங்கு செல்லப்பாவின் முகம் மற்றும் முதுகில் ரத்த காயங்களுடன் மர்மான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்லப்பாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.