Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா, அப்பாக்கு பிடிச்ச…. பையனை தான் கல்யாணம் பண்ணுவேன்…. டாப்ஸி ஓபன் டாக்…!!!

டாப்ஸி இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார்.   இவர்  ஆடுகளம், வந்தான், வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது இந்தத் தொடர்களில் பிசியாக இருக்கிறார் இந்நிலையில் இவர் டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மதியாஸ் போவை காதலித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவருடன் ஜாலியாக வெளியே சுற்றுகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசிய நடிகை டாப்ஸி, என்னுடைய அம்மா அப்பா ஏற்காத எந்த ஒரு ஆணையும் நான் திருமணம் செய்து கொள்ளவே மாட்டேன்.  நான் இதுவரை டேட் செய்தவர்களிடம் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை காதல் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. என்னுடைய திருமணம் குறித்து என்னுடைய பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள். சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுமாறும் அடிக்கடி கூறி வருகிறார்கள். திருமணம் செய்யாமல் இருந்து விடுவேனோ? என்பது அவர்களுடைய கவலையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |