‘இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 96 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வரும் போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பிரான்ஸ் அரசு எச்சரித்துள்ளது. வெளிநாடு சென்று திரும்பும் பிரான்ஸ் மக்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்று சான்றிதழ் தருவது கட்டாயமாகும். தற்போது பரவிவரும் டெல்பிளஸ் வைரஸால் கொரோனாவில் நான்காவது அலை வரக்கூடும் என்று பிரான்ஸ் அச்சம் அடைந்துள்ளது.