இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொள்ளிடம் அணைக்கரை பகுதியில் பேருந்து போக்குவரத்து இயக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கொள்ளிடம் பகுதியில் 2018-ஆம் ஆண்டு கனமழை பெய்துள்ளது. இதனால் கொள்ளிடம் அணைக்கரையில் நீரின் வரத்து அதிகரித்ததால் உபரி கல்லணை ஆற்றில் கலந்தது. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் அதிகரித்தால் கல்லணையிலிருந்து 2 லட்சம் கன அடி உபரி நீரானது ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனையடுத்து நீரின் வரத்து அதிகமாக இருப்பதால் கொள்ளிடம் அணைக்கரையில் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் பாலத்தின் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதனையடுத்து கனரக வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவி.செழியன் தலைமையில் அணைக்கரை பாலங்களுக்கு இடையில் பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் புறநகர் பேருந்துகள் இயக்குவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.