Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் தனது தங்கையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் தனது தங்கையை திருக்களூரில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் விடிந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அருகிலிருந்தவர்கள் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெருமாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் பெருமாளுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுடலைமுத்து என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமாள் சுடலை முத்துவின் மனைவியான சுப்புலட்சுமி மற்றும் அவரின் அக்காளன கல்யாணி என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த சுடலைமுத்து அவரின் மகனான மாதேஷ் மற்றும் அவரின் உறவினரான செந்தில்நாதன் ஆகியோர் இணைந்து பெருமாளை கட்டையால்  தாக்கியுள்ளனர். இதனை அறிந்த பெருமாளின் உறவினரான முத்து என்பவர் தகராறை தடுத்து அவரை, அவர்களிடம் இருந்து மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு பெருமாளை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து முத்து காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக சுடலைமுத்து, மாதேஷ் மற்றும் செந்தில் நாதனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |