Categories
உலக செய்திகள்

இல்லாத ஒன்றை இருப்பது போல் நினைத்த நபர்.. குடும்பத்தையே கொன்று குவித்த அவலம்..!!

பிரான்சில் ஒரு நபர் தன் உறவினர்கள் தங்கப்புதையலை தன்னிடம் மறைப்பதாக கருதி குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொடூரமாக கொன்றுவிட்டார்.

பிரான்ஸில் இருக்கும் Orvault என்ற இடத்தில் வசிக்கும் 50 வயது நபர் Hubert Caouissin. இவர் தன் உறவினர்கள் Pascal, Brigitte என்ற தம்பதி மற்றும் அவர்களின் பிள்ளைகள் Sebastien, Charlotte  போன்றோரை அவர்களது வீட்டிலேயே கொடூரமாக கொன்றுள்ளார்.

அதாவது Hubert, இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கனடாவிற்கு, பிரான்ஸில் உள்ள ஒரு வங்கியிலிருந்து தங்க கட்டிகள் கொண்டு செல்லப்பட்டதில், சில தங்கக்கட்டிகள் Brest என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அந்த புதையலை Pascal குடும்பத்தினர் வைத்துள்ளதாகவும் கருதியிருக்கிறார்.

அதனை தன்னிடம் மறைக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறார். எனவே அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார். அதன் பின்பு மூன்று நாட்கள் கழித்து அவர்களின் உடல்களை துண்டாக வெட்டி தசைகளை புதருக்குள் விலங்குகள் உண்பதற்காக போட்டிருக்கிறார். மேலும் தோல் மற்றும் எலும்புகள் போன்றவற்றை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எரித்திருக்கிறார்.

காவல்துறையினர் விசாரணையில் அனைத்தும் தெரியவந்தது. அப்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அனால் அவர் உறவினர்களுடன் தனக்கு பிரச்சனை ஏற்பட்டதாகவும் தற்காப்புக்காக அவர்களை கொலை செய்ததாகவும் தெரிவித்தார். ஆனால் மனோவியல் ஆலோசகர்கள் மற்றும் மன நல மருத்துவர்கள் பரிசோதனையில், நடக்காத ஒன்றை நடந்தது போல் நம்பக்கூடிய மனநலப் பிரச்சனை அவருக்கு நீண்டநாட்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். அவருக்கு நீதிமன்றம் 30 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |