தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முதல்வர் மட்டுமல்லாமல் அமைச்சர்களும் மக்களுக்காக பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ராதா அனிதா ராதாகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உப்பங்கழி ஏரி பகுதியில் மண்ணரிப்பு ஏற்படுது குறித்து ஆய்வு செய்வதற்காக அதிகாரிகளுடன் சென்றார்.
அப்போது கடல் தண்ணீரில் கால் வைக்க அமைச்சர் தயங்கியதால் மீனவர் ஒருவர் அமைச்சரை குண்டுகட்டாக தூக்கி கொண்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோவை ஷேர் செய்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம். கடல் தாயின் அலைகள் காலில் தவழுவதை கூட தாங்க முடியாத ஒருவர் மீன்வளத்துறை அமைச்சர் வெட்கக்கேடு என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்