தேனி மாவட்டத்தில் குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தியாகி வெங்கடாசலம் தெருவில் தனியார் பேருந்து ஓட்டுநரான அன்புகணேஷ்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி வெங்கடேஷ்வரி. இந்நிலையில் சில தினங்களாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அன்புகணேஷ் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அன்புகணேஷ் தூங்க செல்வதாக கூறி ஒரு அறைக்குள் சென்றுள்ளார். ஆனால் நேற்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த வெங்கடேஷ்வரி அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்துள்ளார். ஆனால் அங்கு அன்புகணேஷ் தூக்கில் உயிரிழந்தபடி காணப்பட்டுள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி கதறி அழுதுள்ளார்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த கம்பம் தெற்கு போலீசார் அன்புகணேஷின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு கம்பம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.