Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. தொட்டியில் தண்ணீர் ஏற்றியபோது…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எழிச்சூர் மதுரா புதுப்பேட்டை பஜனை கோவில் தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் மின்மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் ஏற்றியபோது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பாஸ்கர் படுகாயமடைந்தார். இதனையடுத்து பாஸ்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பாஸ்கரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஸ்கரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |