Categories
ஆன்மிகம் இந்து

விநாயகர் பிரமச்சாரி என்றுதானே கேள்வி பட்டிருக்கிறோம்…? இங்க இவருக்கு திருக்கல்யாணம் நடக்குமாம்…. அற்புத கோவில்…!!!

முழு முதற் கடவுளாக நாம் வணங்குவது விநாயகரை தான். பிற கடவுள்களுக்கு இல்லாத தனி சிறப்பு இவருக்கு உண்டு என்றே சொல்லலாம். அனைத்து கோவில்களிலும் விநாயகரை தரிசித்த பின்னரே மற்ற தெய்வங்களை தரிசிக்க முடியும். நம் ஊர்களில் விநாயகர் தனியாகத்தான் காட்சி தருவார். ஆனால் ஓர் இடத்தில் விநாயகர் அவர் தாயார் சக்தி தேவியாரோடு காட்சி தருகிறார். அத்தலத்தை பற்றி இப்பொழுது நாம் காண்போம்.

பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி காலத்தில் கிபி 1688இல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினார்கள். இக்கோட்டைக்கு பின்புறம் இருந்த கோவிலே மணக்குள விநாயகர் திருக்கோவில். இத்திருத்தலத்தில் மேல்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளதிருக்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மணற்குளத்தின் கீழ் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப்பட்டிருந்தது. இதன் காரணமாக மனற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் வந்தது. எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார்.

தினமும் நெய்வேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வாராம். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது.
மூலவரான விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீது தான். பீடத்தின் இப்பகுதியில் மூலவருக்கு மிக அருகில் அரை அடி வட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்கிறது. இதன் ஆழத்தை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நம் நாட்டில் விநாயகருக்கு தங்கத்தால் ஆன கோபுரம் உள்ளது என்றால் அது இத்தலத்தில் மட்டும் தான். மேலும் இத்தலத்தில் மட்டும் தான் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

பிரமச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர் இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் என்னும் மனைவிகளுடன் காட்சி அளிக்கிறார். பாண்டிச்சேரியில் 1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகள் தங்கியிருந்த முண்டாசு கவிஞர் பாரதி, இந்த விநாயகரை போற்றி நான்மணிமாலை என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார். இத்தலத்திற்கு சென்று வழிபட காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் செல்லலாம்.

Categories

Tech |