நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள வாழ் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான கானா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
Happy & elated to associate with @SonyLIV for our #Vaazhl directed by @thambiprabu89. Premiering #Vaazhl on #SonyLIV from July 16 😇👍
Audio & trailer from tomorrow 🥳#VaazhlOnSonyLIV@Siva_Kartikeyan @KalaiArasu_ @pradeep_112 @SonyMusicSouth @madhuramoffl pic.twitter.com/MNNSACExvQ
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 8, 2021
தற்போது சிவகார்த்திகேயன் மூன்றாவதாக ‘வாழ்’ படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கியுள்ளார். கடந்த ஆண்டே இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வாழ் படம் வருகிற ஜூலை 16ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.