பிரிட்டன் அரசு தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கவுள்ளது.
பிரிட்டனில் வரும் 19ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. நாட்டில் மூன்றாவது தடவையாக படிப்படியாக தளர்வுகள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் போக்குவரத்து துறை அமைச்சரான கிராண்ட் ஷாப்ஸ், சுற்றுலா பயணிகளுக்கு விதிமுறைகளில் சில விலக்குகள் அளிக்கப்படவிருப்பதாக கூறியிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக இருக்கும் நாடுகளின் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி முழுமையாக செலுத்தியிருந்தால் தனிமைப்படுத்துதல் போன்ற விதிமுறைகளில் விலக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.