விருச்சிகம் ராசி அன்பர்களே.! பயணங்களை தள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டும்.
இன்று காரியங்களில் உங்களுக்கு கண்டிப்பாக அனுகூலம் இருக்கும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்களை சாதிக்க முடியும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் ஏற்படும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்க கூடிய வாய்ப்பு இருக்கின்றது. சுயமான சிந்தனை வெளிப்படும். தேவையான நிதி உதவி கிடைக்கும். சுயமான சிந்தனை இருப்பதினால் காரியங்களில் வெற்றி இருக்கும். காரிய தடைகள் விலகி செல்லும். அனுகூலமான பலன் இருக்கும். எதிர்ப்புகள் நீங்கி விடும். இன்று தொலைதூரப் பயணங்களை தள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டும்.
காதல் கைகூடும். காதலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி விடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல தேர்ச்சி இருக்கும். சக மாணவர்களால் ஏற்பட்ட எதிர்ப்புகளும் தடைகளும் விலகிவிடும். உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்