நடிகர் சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜாவின் ‘U1 ரெகார்டஸ்’ தயாரிப்பு நிறுவனம் ‘தப்பு பண்ணிட்டேன்’ என்கிற ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் இருவரும் இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர்.
The much awaited #ThappuPannitten 💔 music video is out now▶️ https://t.co/1w4003AclC@U1Records @SilambarasanTR_ @noiseandgrains @kalidas700 @akash_megha @abineshelango @nandhiniabinesh @iamSandy_Off @AkPriyan3 @DONGLI_JUMBO @karya2000 @vidhu_ayyanna @LyricistVR @mojappofficial
— Raja yuvan (@thisisysr) July 8, 2021
மேலும் டாங்லி ஜம்போ இயக்கியுள்ள இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். நேற்று இந்த பாடலின் டீசர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ‘தப்பு பண்ணிட்டேன்’ ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது . ரசிகர்களை கவர்ந்த இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.