உலகிலேயே குள்ளமான பசுவை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது.
வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து சாரிகிராம் என்ற பகுதி 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் உலகிலேயே குள்ளமான பசு ஒன்று உள்ளது. அந்த பசுவிற்கு ராணி என பெயர் சூட்டியுள்ளனர். இந்தப் பசுவின் உயரம் மற்றும் எடையானது 50 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 26 கிலோகிராம் ஆகும். இதனை அடுத்து ராணி பசுவை பார்ப்பதற்காக மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பசுவுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். இதனைஅறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் பண்ணை உரிமையாளாரிடம் பசுவை பார்க்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த பசுவானது உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் பசுவை விட 10 செ.மீ குறைவானது என்று பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.