விருச்சிகம் ராசி அன்பர்களே.! எதிர்பார்த்து காத்திருந்த பண வரவு கிடைக்கும்
இன்று எதையும் சாதிக்கும் துணிச்சல் உங்களிடம் இருக்கின்றது. காணாமல் போன முக்கிய ஆவணங்கள் உங்கள் கையில் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் மனதை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும். அரசு உதவி கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சாதிக்க முடியும். வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்து காத்திருந்த பண வரவு கிடைக்கும். தனி திறமையை வெளி உலகத்திற்கு எடுத்துக் கட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கின்றது. மனதிற்குள் இருந்த கஷ்டங்கள் நீங்கி விடும். கவலைப்பட வேண்டாம்.
சந்திராஷ்டம தினம் இன்னும் முடியாததால் சில விஷயங்களில் தாமதம் ஏற்படும். அதனால் சில விஷயங்களில் குழப்பம் ஏற்படும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மற்றவரை விமர்சிக்க வேண்டாம். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு சொல்ல வேண்டாம். எந்த ஒரு பஞ்சாயத்துகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய அக்கறை இருக்கும். கல்வியில் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு